You are here: SriPedia - SriRangaSri - Archives - Dec 2005

SriRangaSri List Archive: Message 00066 Dec 2005

 
Dec 2005 Indexes ( Date | Thread | Author )
[Date Prev][Date Next][Thread Prev][Thread Next]


  Adiyeen thaasasya vignaapanam. Following is an article by Sri PBA Swamy
found in an old issue of "SRI RAMANUJA". Members using windows2000/XP can
enjoy. Others may kindly excuse me. Even those using win 98 can convert to
unicode Tamil by logging on to www.suratha.com anddownload the necessary
software which is free. I shall post daily one paasura vyaagyaanam from the
article and will provide it in .pdf format also at the
end.

                               ஸ்ரீ:

                              ஸ்ரீரஸ்து

                     தி ரு ப் பா வை  ஜீ ய ர்

         நம்முடைய ஸம்ப்ரதாயத்தில் எம்பெருமானார்க்குத் திருப்பாவை ஜீயர் என்று
ஸுப்ரஸித்தமான வ்யபதேசமுள்ளது. திருப்பாவையில் மிக்க ஈடுபாடு கொண்டு அதை
யநுஸந்திப்பதில் போர, அபிநிவிஷ்டராயெழுந்தருளி யிருந்தது பற்றி அங்ஙனே வ்யபதேச
முண்டாயிற்று என்பது தவிர மற்றுமோர் சிறந்த ஹேதுவுமுண்டு. அதாவது,
திருப்பாவையில் ஒவ்வொரு பாசுரத்திலும் எம்பெருமானாரைச் சிந்திக்கவேண்டும்படியான
சொற்றொடர்கள் அமைந்திருக்கின்றன வென்பதே. இஃது ஏறிட்டுரைக்கும் முறையிலன்றிக்கே
ஏற்ற முறையில் விவரிக்கப்படுமாறு காண்க.

                 1. மார்கழித் திங்கள்

   "மதிநிறைந்த நன்னாள்" என்பதற்குச் சந்திரன் நிறைந்த நன்னாள் - பரிபூர்ண
சுக்ல பக்ஷம் என்பது ஒரு பொருள். மதி - ஞானம்; அது நிறையப் போகிற நல்ல நாள்
என்பது உள்ளுறை பொருள். எம்பெருமான் அவதரித்த நாள் இருள்தருமா ஞாலத்தவர்களுக்கு
ஞானம் நிறைவதற்கு ஹேதுவான நன்னாளன்றோ? 'நிறையப்போகிற' என்ன வேண்டுமிடத்து
"நிறைந்த" என்றது காலவழுவமைதி யென்பர் தமிழர். "ஆசம்ஸாயாம் பூதவச்ச" என்பது
வடமொழி வ்யாகரணம். யதிராஜ ஸப்ததியில் "அநபாய விஷ்ணுபத ஸம்ச்ரயம் பஜே" என்கிற
சுலோகத்தினால் எம்பெருமானார் விலக்ஷண சந்திரனாக ப்ரதிபாதிக்கப் பட்டுள்ளார்.
அந்த யதிராஜ சந்திரன் தோன்றிய நன்னாள் என்னவுமாம். சித்திரைத் திங்களானது
மனிதர்களுக்கு முதல் மாதம். மார்கழித் திங்களானது தேவர்களுக்கு முதல் மாதம்
என்னும் பொருத்தமுமுளது. இது வ்யாக்யானங்களிலும் விசதம். ஆகவே, ஸ்வாமியின்
அவதாரம் முதல் மாதத்திலென்கிற ப்ரஸித்திக்குக் குறையில்லை. [போதுவீர் போதுமினோ]
"எங்கள் குழுவினில் புகுதலொட்டோம்" என்கிறவர்களைப் போலன்றிக்கே
வருகிறவர்களெல்லீரும் வாருங்கள் என்று உகந்து அழைத்து உரைப்பவர்
எம்பெருமானாரேயாவர்.


--
Adiyen,
Dasan,

Thiruppathi Raguveeradayal
C/O SRIRANGAM SRIMAD
ANDAVAN ASHRAMAM,
THIRUPPULLANI 623532
04567-254242//919443301091


[Non-text portions of this message have been removed]






------------------------ Yahoo! Groups Sponsor --------------------~--> 
Join modern day disciples reach the disfigured and poor with hope and healing
http://us.click.yahoo.com/lMct6A/Vp3LAA/i1hLAA/VkWolB/TM
--------------------------------------------------------------------~-> 

 
Yahoo! Groups Links

<*> To visit your group on the web, go to:
    http://groups.yahoo.com/group/SriRangaSri/

<*> To unsubscribe from this group, send an email to:
    SriRangaSri-unsubscribe@xxxxxxxxxxxxxxx

<*> Your use of Yahoo! Groups is subject to:
    http://docs.yahoo.com/info/terms/
 



[Date Prev][Date Next][Thread Prev][Thread Next] [Date Index ] [Thread Index ] [Author Index ]
Home Page
http://www.ibiblio.org/sripedia
srirangasri-subscribe@yahoogroups.com
To subscribe to the list